Crazy Mohan’s – கண்டேன் அனுமனை

Crazy Mohan: கண்டேன் அனுமனை ————————————— அனுமந்த ராயா அசகாய சூரா தினமுந்தன் பாதம் தொழுவேன் -எனையிந்த பாழும் மனமென்ற ஆழியைத் தாண்டிட தோழா கொடுத்திடு தோள்….(1) அனுதினம் ராமா யணமதை ஓதும் அனுமனே அஞ்சனை அன்பே -கணுவிலா பக்திக் கரும்பே பயமிலா வாழ்க்கை சித்திக்கச் செய்வாய் சரண்….(2) வினய வடிவம் விழிகளில் பாஷ்பம் கணைவிடு ராமன் கதையே -துணையாய் அணையா விளக்காய் அமர்ந்த அனுமான் இணையே(தும்) இல்லா இறை….(3) பாரிஜாத வாசம் பணிராமன் காரியம் வேறுஜாதி வானரம் மாருதி -மாறுவேடம் பூண்டுவந்த ருத்திரன் பூமிவாயு புத்திரன் வேண்டுவோர்தம் வீட்டில் வரவு….(4) அண்ணல் நினைப்பினால் கண்ணில் பனித்திரை விண்ணில் பறந்தோன் வெகுளியாய் -திண்ணையில் ஸ்ரீ£ராம் ஜெயராம் … Continue reading Crazy Mohan’s – கண்டேன் அனுமனை